கோவை சரளா -நடிப்பே பிரதானம்
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 700 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர் கோவை சரளா. இப்போதும் தமிழ் சினிமாவின் காமெடி நடிகைகளில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். ‘இட்லி’ படத்தின் படப்பிடிப்புக்காக தயாராகிக் கொண்டிருந்தவரிடம் பேசியபோது...
« தமிழ் சினிமா காமெடியில் தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்ப தில்லையே..?
ஆரம்ப காலத்தில் காமெடி எழுது பவர்கள் பலர் இருந்தார்கள். இப்போது என்ன கதை எடுக்கிறோம் என்று சில இயக்குநர்களுக்கே தெரிவதில்லை. அதனால் கதாபாத்திரங்களுக்கு யாரை ஒப்பந்தம் செய்வது என்பதும் தெரிவ தில்லை. இன்று காமெடி எழுதுபவர்கள் மிகவும் குறைவு. காமெடி நடிகர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள 4 பேரை உடன் வைத்துக்கொண்டு காட்சிகளை எழுதிக்கொள்கின்றனர். அவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் உள்ளதுபோலத்தான் அவர்கள் எழுதிக் கொள்வார்கள். காமெடி நடிகைகளுக்கு முக்கியத்துவம் குறைந்ததற்கு இதுவே காரணம்.
« தமிழக அரசு விருது பெற்றிருக்கிறீர் கள். இன்னும் தேசிய விருது பெற வில்லையே..?
இப்போதெல்லாம் விருதுகளுக்கு பரிந்துரை அவசியம். தொழில்நுட்பம் வளர்ந்தாலும், சினிமாவில் பரிந்துரை ரொம்ப முக்கியமாக இருக்கிறது. யாரும் பரிந்துரை செய்து எனக்கு விருது அவசியம் இல்லை. அதுவாக வந்தால் ஏற்றுக் கொள்வேன். விருதுக் காக நான் நடிக்க வரவில்லை. அது மட்டுமன்றி, இன் னும் என்னை ஒரு காமெடி நடிகையாகத் தான் பார்க் கிறார்கள். நான் இன்னும் குணச் சித்திர நடிகை யாக அவர்கள் மன தில் பதியவில்லை என நினைக்கிறேன். நான் இன்னும் சிறப் பாக நடித்தால் கொடுக்கலாம். தேசிய விருது கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் எதுவும் எனக்கு இல்லை.
« காமெடி - குணச்சித்திரம் இரண்டில் எதில் நடிக்கப் பிடிக்கும்?
சிறுவயதில் இருந்தே நடிப்பை காதலித்துதான் சினிமாவுக்கு வந் தேன். அதில் எந்த பாத்திரம் வந்தாலும் சவாலாக ஏற்றுக்கொண்டு நடிக்கிறேன். தினமும் படப்பிடிப்புக்கு வரும்போது, புதுமுக நடிகையாக நினைத்துக்கொண்டுதான் வருகிறேன். என் தொழிலுக்கு ரொம்ப உண்மையாக இருக்கிறேன்.
X STD STUDENT ACTS AS PRAGNENT WOMAN-MUNTHAANAI MUDICHI |
« இன்னும் திருமணம் செய்து கொள்ளாததற்கு என்ன காரணம்?
எல்லோரையும் போலத்தான் நானும் இருக்க வேண்டுமா? வித்தியாசமாக இருந்துவிட்டுப் போகிறேனே! ஒரு குகைக்குள் போகும்வரை அதில் என்ன இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருக்கும். உள்ளே போனதும், வெளியே இருப்பவர்களைப் பார்த்து, ‘உங்களை மாதிரி நானும் வெளியிலேயே நின்றிருக்கலாம்’ என்பார்கள். திருமண மான பெண்கள் பலரிடம் இந்த எண்ணம்தான் இருக்கும் என நினைக்கிறேன். தனியாக இருப்பதும் கஷ்டம்தான். மறுக்கவில்லை. ஆனால், அதுகூட ஒரு பெரிய குடும்பத்துக்கு சமம். ஒரு குழந்தை பிறந்தால், அந்த குழந்தையைச் சுற்றியே வாழ்க்கை இருக்கும். தனியாக இருப்பவர்களுக்கு அனைவருமே குழந்தைகள்தான்.
« உங்கள் வாழ்க்கையில் காதல் என்பதே இல்லையா..?
காதலித்திருந்தால் இந்நேரம் திரு மணம் செய்திருப்பேன். காலில் விழுந்தாவது ‘தாலி கட்டுய்யா’ என்று கேட்டிருப்பேன். சிறு வயதில் சாதிக்க வேண்டும் என்ற வெறி மட்டுமே இருந்தது. குதிரைக்கு கடிவாளம் போட்டது மாதிரி, என் கவனம் முழுவதும் ஒரே பக்கமாக இருந்தது. எனக்கு உண்மையில் யார் மீதும் காதல் வரவில்லை. என்னை யாரும் காதலிக்கவும் இல்லை.
« இப்போதைய காமெடி பற்றி?
கடைசியாக வடிவேலு காமெடி ரசிக்கும்படி, வாய்விட்டு சிரிக்கும்படி இருந்தது. இப்போது அதுபோல இல்லை. வண்டி ஓட்டணுமே என்று காமெடி செய்கிறார்கள். தமிழ் சினிமா வில் காமெடிக்கு பஞ்சமாகிவிட்டது. நல்ல கருத்தான, தெளிவான காமெடி இப்போது வருவதில்லை. இதுதான் உண்மை!
« தமிழகத்தில் ஒருதலைக் காதல் கொலைகள் அதிகரித்துவிட்டது. தமிழ் சினிமாவில் நாயகர்களை சித்தரிக்கும் விதம்தான் அதற்கு காரணம் என்கிறார்கள். இதில் உங்கள் கருத்து...
இதை 100 சதவீதம் மறுக்கிறேன். சினிமாவைப் பார்த்துதான் ஒருவன் கெட்டுப்போகிறான் என்பது மிகப்பெரிய பொய். இன்றைக்கு அனைத்து மக்களின் மனதிலும் உடனே பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆசைகள் அதிகமாவதால் கொலைகள் நடக்கிறது. இதற்காக சினிமா மீது பழி போடக்கூடாது. அனைத்து பிரச்சினைகளையும் மறந்து 2 மணி நேரம் சினிமா பார்க்கிறீர்கள். அந்த சினிமாவை குறை சொன்னால் மக்களின் வாழ்க்கையில் அந்த 2 மணி நேர நிம்மதியும் இல்லாமல் போய்விடும்.
« தேர்தல் பிரச்சாரம் செய்தீர்கள். பிறகு விலகிவிட்டீர்கள். என்ன காரணம்?
எனக்கு அரசியல் பிடிக்கவில்லை. தவிர, சினிமா வேலையே சரியாக இருக்கிறது. என்னை வற்புறுத்தி அழைத்ததால் அரசியலுக்கு வந்தேன். அங்கு பலரைப் பற்றியும் பல விதமாகப் பேசவேண்டி இருக் கிறது. ஆளுக்கு தகுந்த மாதிரி ஜால்ரா போடுவது எனக்கு பிடிக்காது. சினிமாவில் அதெல்லாம் கிடையாது. பிடித்தால் பேசுவேன், இல்லையா போய்க்கொண்டே இருப்பேன்.
No comments:
Post a Comment